வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 24 மே 2015 (10:39 IST)

நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும்; ஜெயலலிதாவிற்கு வாழ்த்து - இல.கணேசன்

நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துகளையும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், ”பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் நான் கலந்து கொண்டு இருக்கிறேன்.
 
ஏற்கனவே மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி அமைந்ததால் சட்டப்படி பதவி விலக வேண்டியதாயிற்று. அதன் பிறகு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தது.
 
நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. புதிய அரசுக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஒரு இடைக்கால அரசு மாறுபட்டு ஜெயலலிதா நேரடி பொறுப்புக்கு வந்துள்ளதால் ஆட்சி சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கும்” என்று கூறினார்.