வேலூர் தொகுதியை விட்டுக்கொடுக்காத துரைமுருகன்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்தும் ஏசி சண்முகம்..!
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆக இருக்கும் நிலையில் அவருடைய செயல்பாடு சரியாக இல்லை என்றும் எனவே அவரை வேறு தொகுதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் இடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் திமுகவின் மூத்த அமைச்சர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் என்ற வகையில் துரைமுருகனை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடியாது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே வேலூர் தொகுதியை எப்படியும் அவர் தனது மகனுக்காக திமுக தலைமை இடம் கேட்டு வாங்கி விடுவார் என்றே கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் அதிமுகவை பொருத்தவரை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. எனவே பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகம் தான் இந்த தொகுதியில் கவனத்திற்கு உரிய வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஏசி சண்முகம் தனக்கு மறைமுக ஆதரவு கொடுக்க அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் அவரும் ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வேலூர் தொகுதியை பொருத்தவரை கதிர் ஆனந்த் மற்றும் ஏசி சண்முகம் ஆகிய இருவருக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் இதில் ஏசி சண்முகம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva