1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:07 IST)

யாருக்கு ஆதரவு.. புதிய நீதி கட்சியின் ஏசி சண்முகம் அறிவிப்பு!

AC shunmugam
ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை புதிய நீதி கட்சியின் தலைவர் டாக்டர் ஏசி சண்முகம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் இது குறித்து முடிவு செய்யப்படாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்களை அதிமுகவின் பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என புதிய நீதி கட்சியின் நிறுவனர் டாக்டர் ஏசி சண்முகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குறிப்பாக தற்போது இந்த இடைத்தேர்தலில் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
இந்த இக்கட்டான தருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் அதனை புதிய நீதி கட்சி வரவேற்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva