1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

அதிமுக தோல்விக்கு பாஜக காரணமா? விளக்கிய தமிழிசை!

ஏசி சண்முகம் வேலூர் தொகுதியில் தோற்றதற்கு பாஜக காரணம் இல்லை என தமிழிசை விளக்கம் தெரிவித்துள்ளார்.   
 
சமீபத்தில் நடந்து முடிந்த வேலூர் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் தோலிவியை தவிழுனார். இது குறித்து அவர் கூறியதாவது, 
 
என்ஐஏ சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம், 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தி மட்டும் இல்லாவிட்டால், 15,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். இஸ்லாமியர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர். ஆனாலும் வேலூர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என தெரிவித்தார். 
இதனால் கடுப்பான தமிழிசை, இதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழிசை தெரிவித்ததாவது, ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. பாஜகவால் அவர் தோற்கவில்லை. ஒருவேளை ஏசிஎஸ் சண்முகம் சொல்வதுபோல, இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் அவர் தோற்றிருப்பாரே தவிர இப்படி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க மாட்டார். 
 
ஏசி சண்முகம் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் இஸ்லாமியர்கள் இந்த சட்டத் திருத்தங்களை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவே செய்கிறார்கள். எதிர்ப்பதாக சொல்வதா காங்கிரஸ்தான். எனவே ஏசிஎஸ் தோற்க நிச்சயம் இஸ்லாமியர்களோ அல்லது பாஜகவோ காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.