சிறையில் எப்படி இருக்கிறார் அபிராமி? - வெளியான தகவல்

Last Modified புதன், 5 செப்டம்பர் 2018 (15:43 IST)
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 

 
சுந்தரம், அபிராமி இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அபிராமி அங்கு என்ன மனநிலையில் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிறையில் அவருக்கு அளிக்கப்படும் உணவுகளை சரியாக சாப்பிடுவதில்லையாம்.
 
சக பெண் கைதிகள் யாரிடமும் அவர் பேசுவதில்லை...
 
அவரிடம் பேச சில பெண் கைதிகள் முயன்றாலும் அவர்கள் முகத்தை கூட அவர் பார்ப்பதில்லையாம்...
 
எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்...
 
சில சமயம் ஆவேசத்துடன் கண்கள் சிவந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். 
 
ஆனால், குழந்தைகளை கொன்று விட்டோமே என குற்ற உணர்ச்சியில் அழுகிறாரா அல்லது கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ முடியவில்லையே என்கிற வருத்தத்திலும், ஆதங்கத்திலும் அழுகிறாரா என்பது யாருக்கும் புரியவில்லையாம்.


இதில் மேலும் படிக்கவும் :