எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆவின் பால் விலை உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!
ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பாக நடைபெறும் பால் விநியோக நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தினால் அறிவிப்பை வெளியிடும். அதே பால் உற்பத்தியாளர்களுக்கான விலையும் அறிவிக்கப்படும். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் இம்முறை மறைமுகமாக விலையை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் ஆவின் எப்.சி.எம். மில்க் ஒரு லிட்டர் ரூ.51க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு லிட்டர் பாக்கெட் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. அரைலிட்டர் பாக்கெட் 26 ரூபாய் என விற்கப்படுவதால் 1 ரூபாய் விலையேற்றம் நடந்துள்ளது. அதே போல எப்.சி.எம்., பாலில் இதர சத்து 1 சதவீதம் மட்டும் அதிகரித்து எப்.சி.எம்., டி மேட் என்ற நான்கு ரூபாய் விலையேற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.