செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (08:55 IST)

சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு

சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மேலும் சோழிங்கநல்லூர் பால்பண்ணை, அம்பத்தூர் பால்பண்ணை, மாதவரம் பால் பண்ணை ஆகிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் கடந்த இரண்டு நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் குறித்த நேரத்தில் பால் கிடைக்கவில்லை என பொதுமக்கள் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு ஆவின் பால் கிடைத்துவிடும் என்றும் ஆனால் கடந்த மூன்று நாட்களாக காலை 7.30  மணிக்கு தான் பால் பாக்கெட் கிடைக்கிறது என்றும் இதனால் விநியோகம் செய்து முடிக்க காலை 9.30 மணி ஆகிறாது என்றும் பால் முகவர் ஒருவர் அறிவித்துள்ளார். 
 
இது குறித்து ஆவின் அதிகாரி கூறியபோது, ‘பழைய ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் முடிவடை உள்ள நிலையில் புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva