1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (15:04 IST)

மறுமலர்ச்சி வேண்டுமா? கமலுக்கு ஆதீனம் அரசியல் டிப்!!

மறுமலர்ச்சியை எதிர்பார்க்க என்ன செய்ய வேண்டும் என கமல ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்  அறிவுரை.

 
கோவை தெற்கு சட்டமன்ற  தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதசால அடிகளாரை சந்தித்தார். அப்போது மக்கள் நீதி மய்யத்திற்கு அவரது ஆதரசை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மருதாசல அடிகளார் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்த கமல் ஹாசனுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.  
 
கமல்ஹாசன் செயல்பாடுகளை தான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  தங்களின் குரல் மதநல்லிணக்கத்திற்காக  ஒலிக்கிறது  என கமல் ஹாசனிடம் தெரிவித்துள்ளார்.  பேரூர் தமிழ்க் கல்லூரி மூலமாகவும், நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம், தங்களின் எண்ணங்களும் அதுவாகவே இருக்கிறது. 
 
இது இன்னும் மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை கூறினார். மேலும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கனும். அப்படி வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கமல ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்  அறிவுரை வழங்கினார்.