1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:32 IST)

கரணம் தப்பியதால் மரணம்.. ஆரணி கபடி வீரர் பரிதாப பலி!

ஆரணியில் நடந்த கபாடி போட்டியில் கலந்து கொண்ட வீரர் கரணம் அடித்தபோது மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியில் களத்துமேட்டு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அங்கு கபாடி போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதில் களத்துமேட்டை சேர்ந்த கே.எம்.எஸ் கபடி குழுவில் வினோத்குமார் என்பவர் விளையாடி உள்ளார். கபாடி போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பயிற்சி மேற்கொண்ட வினோத்குமார் கரணம் அடிக்க முயன்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.