வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2017 (15:57 IST)

சசிகலாவை சந்திக்க விரும்பினால் இது வேண்டும் - கர்நாடக அரசு வலியுறுத்தல்

சசிகலாவை சந்திக்க விரும்பினால் ஆதார் கார்டு வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ஏற்கனவே ரேஷன் கார்டு, ரயில் டிக்கெட், வங்கிகளில் பண வர்த்தனை, பள்ளிகளில் சத்துணவு சாப்பிட என்பது உள்ளிட்ட பல இடங்களில் ஆதார் அட்டை முக்கியம் என்ற அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வருபவர்கள் இனி ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு விதியை கொண்டு வந்தது. 
 
எனவே, இதை கர்நாடக அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது. எனவே, ஏப்ரல் 1ம் தேதி முதல் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், ஆதார் அட்டை இல்லாமல் யாரும் கைதிகளை பார்க்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அப்படி கைதிகளை காண வருபவர்களின் ஆதார் எண் குறித்த விவரங்கள் சிறைப் பதிவேட்டில் குறித்து வைக்கப்படும் எனவும், இது போன்ற நடவடிக்கைகள் சிறைக்கைதிகளின் செயல்பாட்டினை அறிய உதவும் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புதிய நடைமுறையால், இனிமேல் சசிகலாவை சந்திக்க விரும்புவர்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.