1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (11:07 IST)

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உயிரிழந்த மர்ம நபர்.. சடலத்தை எடுப்பதில் சிக்கல்..!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில் அவருடைய சடலத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தின் அருகே உயிரிழந்த நிலையில் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார். 5 மணி நேரத்திற்கு மேலாக சடலம் அங்கே இருக்கும் நிலையில் பயணிகள் வரிசையில் நின்று சர்வ சாதாரணமாக டிக்கெட் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் ஆகியோர்களுக்கு இடையே உள்ள எல்லை பிரச்சனை காரணமாக சடலத்தில் எடுப்பதை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 உயிரிழந்த நபர் யார் என்று இதுவரை தெரியாத நிலையில் சடலத்தை அப்புறப்படுத்தி பிரயோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் வழக்கு பதிவு செய்தால் தான் இந்த நபர் யார் என்பது தெரியவரும்.

ஆனால் இல்லை பிரச்சனை காரணமாக சடலத்தை எடுக்க தாமதம் ஆகி வருவதால்  செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran