1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (16:14 IST)

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 3வது வழக்கு..!

karunanidhi pen
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நினைவுச் சின்னத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பின் பக்கமாக கடல் மேல் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ஏற்கனவே மீனவர் சங்கம் சார்பிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பிலும் தனிதனி மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து உள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva