செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (20:52 IST)

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை?

சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மீண்டும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே கருமன் பூண்டி பகுதியில் வசித்து வந்தபவர் அருண்குமார்(24). இவர் பிகாம் பட்டதாரி ஆவார்.

இவர்  கடந்த 22 ஆம் தேதி தன் வீட்டில்இருந்து கிளம்பிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இன்று அருண்குமாரின்  உடல் கிணற்றில் மிதந்தது.

பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்,  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆன்லைனில் பணமிழந்தாரா என  விசாரணை செய்யப்பட்டு வருகிறது.