1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (11:10 IST)

ப்ரொஃபெசருடன் ஓடிப்போன கல்லூரி மாணவி

தேவாரண்யத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாடம் எடுக்கும் ப்ரொஃபெசருடன் ஓடிப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கூட்டிக் கொண்டு ஓடும் சம்பவம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தாய், தந்தையரை அடுத்து பெரிதாக மதிக்கப்படும் ஜீவன் யார் என்றால் அது ஆசிரியர்கள் தான், ஆனால் அவர்களில் சிலர் இதுமாதிரியான கீழ்த்தரமான செயல்களை செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
தேவாரண்யத்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அதே கல்லூரியில் ப்ரொஃபெசராக இருக்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, அந்த ப்ரொஃபெசர் தான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறந்துவிட்டு அந்த மாணவியை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்கவே, அவர்கள் தப்பித்து ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.