திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:39 IST)

தவறான சிகிச்சையால் குழந்தை கால் இழந்த விவகாரம்: தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை

தவறான சிகிச்சையால் குழந்தை கால் இழந்ததாக சென்னை காவலர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீதும் அல்லது மருத்துவமனையின் மீதும் எந்தவித அலட்சியமும் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் குழந்தையின் உடல்நிலை மற்றும் கல்வியை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ குழு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குழந்தைக்கு செயற்கை கால்கள் பொருத்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva