ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு..நெஞ்சை பதைபதைக்க வைத்த பரபரப்பு சம்பவம்.

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (18:11 IST)
சேலத்தில் ஜவுளிக்கடை உரிமையாளரை, இருவர் அரிவாளை வைத்து சரமாரியாக வெட்டிய வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் ஜவுளி கடை வைத்திருப்பவர் வேலு தங்கமணி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று வேலு தங்கமணி தனது ஜவுளி கடையில் இருந்தபோது, கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் துணி வாங்குவது போல் வந்து வேலு தங்கமணியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலு தங்கமணியை சரமாரியாக வெட்டினர். அதன் பின்பு இருவரும் கடையிலிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலு தங்கமணியை ஜவுளி கடை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த கடையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீஸார் அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, வேலு தங்மணியை வெட்டிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் மற்றும் மணிகண்டன் என கண்டுபிடித்தனர். போலீஸார் அந்த இருவரையும் தேடி வருகின்றனர். ஜவுளி கடை உரிமையாளரை அவரது ஜவுளி கடையிலேயே  இருவர் திடீரென அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :