திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (13:35 IST)

சிறையில் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும்...! பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை!

மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


 
தனது எக்ஸ் தளத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும்படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று,  இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார் என அவர் விமர்சித்துள்ளார்.

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.