1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (10:48 IST)

மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் உயிரிழப்பு!

marina
மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் உயிரிழப்பு!
சென்னை மெரினாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை மெரினாவில் ஆழ் கடலில் சென்று குளிக்க வேண்டாம் என அவ்வப்போது போலீசார் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் இது குறித்த பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும் ஆர்வமிகுதியால் சிலர் மெரினாவில் ஆழ்கடலில் சென்று குளித்து உயிரை மாய்த்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த 17 வயது பள்ளி மாணவன் அஷ்ரப் என்பவர் அலையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கரை ஒதுங்கிய மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.