திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (18:27 IST)

ஒரு ரூபாய்க்கு ’சிக்கன் பிரியாணி’... ’ரவுண்டு ’கட்டிய கூட்டம் !

ஒரு ரூபாய்க்கு ’சிக்கன் பிரியாணி’... ’ரவுண்டு ’கட்டிய கூட்டம் !

பொன்னேரியில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டதால் அந்தக் கடையின் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்களும் பிரியாணி வாங்க கூடி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதால், இந்தியாவில் மட்டும் 81 பேர் இந்த வைரஸ் தாக்குதளால் பாதிக்கபட்டுள்ளனர்.
 
அதேசமயம், கோழியால் தான் இந்த கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு வருவதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் மக்கள் கோழி வாங்க தயங்கி வருகின்றனர். அதனால் கோழியின் விலையும் சரிந்து வருகிறது.
 
இந்நிலையில், பொன்னேரியில் சிக்கன் பிரியாணி விற்பனை மந்தமானதை அடுத்து, 1 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்பட்டுள்ளது. பிரபல நேற்று 120 கிலோ சிக்கன் பிரியாணி மதியம் 12 மணிக்கு தொடங்கிய வியாபாரம் 2 மணி நேரத்திலேயே முடிந்தது.
 
மக்களும் திரளாக வந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.