1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (09:18 IST)

வாடகை வீட்டில் வசித்து வரும் எஸ்.ஐ. வீட்டில் திடீர் ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதா?

வாடகை வீட்டில் வசித்து வரும் நாமக்கல் காவல் நிலைய எஸ்ஐ ஒருவரது வீட்டில் திடீர் என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததாகவும் இதனை அடுத்து அங்கு கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நாமக்கல்லில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் எஸ்ஐ பூபதி. இவரது வீட்டிற்கு திடீரென லஞ்ச ஒழிப்புக்கு காவல் துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் அவரது தந்தை வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் மாமனார் வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
எஸ்ஐ பூபதி வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணமும் சில முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ யாக பூபதி பணியாற்றியபோது வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சோதனையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva