வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (18:16 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு: என்ன காரணம்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் சிவகுமார் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார். 
 
இந்த நிலையில் இவர் பல்லாவரத்தில் பணியாற்றிய போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அதிரடியாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சிவகுமாரின் கார் மற்றும் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் சோதனை முடிந்த பிறகு இது குறித்த விவரங்களை தெரிவிப்போம் என்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran