வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (08:46 IST)

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. ரூ.20 லட்சம் பண மோசடியா?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் அவ்வப்போது அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது திடீரென தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தேர்தல் இருக்கும் நேரத்தில் அரசியல்வாதிகளின் வீடுகளில் இன்னும் பல சோதனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva