ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (16:24 IST)

சம்பளம் தராத ஓனருக்கு கத்தியால் வெட்டு ! கூட இருந்தே சதிச் செயல்... திடுக் சம்பவம்

சென்னை சிந்தாதிரிபேட்டையில்  சம்பள பாக்கியை தராத ஓனரை, மேலாளர் கத்தியால் வெட்டிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  ஒரு உணவு விடுதியை இணைந்து நடத்திவருபவர்கள் பழனிநாதன் மற்றும் செந்தில். இந்த ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்த மேலாளர் ஒருவர் ஊதியப் பிரச்சனை காரணமாக வேலையைவிட்டு நின்றுவிட்டார் என்று தெரிகிறது.
 
இந்நிலையில் ஹோட்டலுக்கு முன்பு பழனிசாமி தனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த மேலாளர் தன் கையில் வைத்திருந்த கத்தியால் பழனிநாதனை கண்டபடி வெட்டிவிட்டு தன் வாகனத்தில் தப்பி ஓடினார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீஸார் பழனிசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் பழனிசாமியைத் தாக்கிய மேலாளரைக் கைது செய்தனர்.
 
போலீஸார் அவரிடம்  விசாரித்த போது, பழனிசாமியின் கூட்டாளி செந்திலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.