திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (09:43 IST)

கள்ளக்காதலியை திருமணம் செய்யத் துடித்த கணவன் - இடையூறாய் இருந்த மனைவியை என்ன செய்தான் தெரியுமா?

நாகப்பட்டினத்தில் திருமணமான நபர் ஒருவர் கள்ளக் காதலியை திருமணம் செய்வதற்காக கட்டின மனைவியை எலி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (32). இவரது மனைவி வினோதா (30). இவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமணம் வாழ்க்கை அவ்வளவாக நன்றாக செல்லவில்லை. அதற்கு காரணம் திருஞானசம்பந்தத்தின் கள்ளத்தொடர்பு.
 
தயவு செய்து உங்களது கள்ளத்தொடர்பை நிறுத்திக் கொள்ளுங்கள் என வினோதா எவ்வளவு கூறியும், திருஞானசம்பந்தம் நான் அவளை தான் கட்டிக்கொள்வேன் என தடாலடியாக கூறியுள்ளார்.
 
நான் இருக்கும்வரை அது நடக்காது என வினோதா கூற, திருஞானசம்பந்தம் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்றனர். வினோதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்குப் போராடிய வினோதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார்,  திருஞானசம்பந்தத்தையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக் காதலியை திருமணம் செய்ய மனைவியை கணவன் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.