திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (21:11 IST)

விடுதலைக்கு பின்னர் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது! – சிறைவாசிகளிடம் ஞானசம்பந்தம் பேச்சு!

Ganasambanthan
சிறைவாசிகள் விடுதலைக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்காலங்கள் காத்திருப்பதாக நம்பிக்கையுடன் இருங்கள் என தெரிவித்ததாக பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தம் பேட்டி



தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா மதுரை மத்திய சிறையில் கொண்டாடப்பட்டது. அந்தவகையில்  மதுரை மத்திய சிறைத்துறை சார்பாக மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு விதமான அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் சிறப்பு நகைச்சுவை கருத்தரங்கம் சிறை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவர், கலைமாமணி ஞானசம்பந்தம் சிறைவாசிகளுக்கு அறநெறி கருத்துக்களை எளிய முறையில் புரியும் சிறைவாசிகளுடன் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து சிறை அங்காடி வை பார்வையிட்ட பின்னர் ஞானசம்பந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் பல்வேறு சீர்திருத்தம் முயற்சிகளை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வரும் பணிகளை  காந்தி ஜெயந்தி தினத்தன்று  மத்திய சிறைக்கு வந்தது மனநிறைவை அளிக்கிறது. சிறந்த மறுவாழ்வு மையமாக மதுரை மத்திய சிறைச்சாலை திகழ்கிறது. குறிப்பாக சிறைவாசத்தின் போது மன அழுத்தத்தின் காரணமாக சில கைதிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் போன்ற செய்திகள் வேதனை அளித்தது. தொடர்ந்து சிறைவாசிகள் விடுதலை பெற்று  வெளியே சென்ற பின்னர் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலங்கள் காத்திருப்பதையும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் விதத்தில்  தெரிவித்ததாகவும் கூறினார்