வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (10:20 IST)

அண்ணன் இறந்ததால் விரக்தி: பெண் பொறியியல் பட்டதாரி தற்கொலை

சென்னை: அண்ணன் இறந்த விரக்தியில், பெண் பொறியியல் பட்டதாரி ஒருவர், தன் தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி (வயது 45). இவருடைய மகள் சர்மிளா(22).பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
 
மாலதியின் கணவர் ரமேஷ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்து தனியாக சென்று விட்டார்.  இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்தார். பெங்களூருவில் வேலை செய்து வந்த அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவர் ரமேஷ், விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற நிலையில், மகன் ராஜ்குமாரும் தற்கொலை செய்து கொண்டதால் மாலதியும், சர்மிலாவும் மனவேதனையில் இருந்தனர். இந்நிலையில் விரக்தி அடைந்த சர்மிளா, தனது தாய் மாலதியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களது உடல் இரண்டு நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் கிடந்தது. இதுபற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து  வீட்டின் பூட்டை உடைத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.