1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (16:51 IST)

சிபிஐ போலீஸ் எனக் கூறி ஐ.டி நிறுவன அதிகாரியிடம் ரூ.3.70 கோடி பறித்த கும்பல்

இந்தியாவில் உள்ள பிரபல சாப்ட்வேர்  நிறுவனம் இன்போசிஸ். இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிறுவனத்தின், இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், இன்போசிஸ்  நிறுவனத்தின் மீது பணமுறைகேடு புகார்கள் வந்துள்ளது உங்களது செல்போன் எண்கள் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி தாங்கள் சிபிஐ மற்றும் மும்பை போலீஸ் எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவன மூத்த அதிகாரிகளிடம் ரூ.3.7 பறித்துள்ள கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.