Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை ஐஐடியில் தீவிபத்து.

புதன், 12 ஏப்ரல் 2017 (23:15 IST)

Widgets Magazine

இந்தியாவின் முன்னணி ஐஐடி கல்வி நிறுவனங்களின் ஒன்றான சென்னை ஐஐடி சென்னையின் மையப்பகுதியான அடையாறு பகுதி அருகே உள்ளது. இந்த ஐஐடியில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

chennai IIT" width="600" />

 


இந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள ஐ.சி.எஸ்.ஆர் அலுவலகக் கட்டடத்தில் சற்று நேரம் முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அலுவலகத்தின் மேல்தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்து ஏராளமான பொருட்கள் நாசமானதாக தகவல் வெளியானது.

ஐஐடி வளாகத்தில் தீவிபத்து என்ற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஐஐடியை நோக்கி விரைந்தன. தீயணைப்பு துறையினர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஐஐடி ஊழியர்களும் ஈடுபட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் பொருள் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாகவும் ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெண்களின் மார்பு, இடுப்பு எந்த சைஸில் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடமா இது?

அழகான பெண்களின் மார்பு, இடுப்பு, மற்றும் பின்பக்கம் எந்த சைஸில் இருக்க வேண்டும் என்றும் ...

news

2.4 இன்ச் ஸ்க்ரீனில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

கடந்த சில வருடங்களாகவே பெரிய சைஸ் ஸ்மார்ட்போனுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் போஷ் ...

news

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5 இல்லை: அடித்து கூறும் மனோபாலா

பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அதிமுகவின் ...

news

அஸ்வின் விக்கெட் எடுத்தா மட்டும் இந்தியன், விவசாயிகள் போராடினால் தமிழர்களா? நிருபருக்கு சூடு வைத்த ஆர்ஜே பாலாஜி

பொதுவாக காமெடி நடிகர்கள் சமுக சேவையில் விருப்பம் இல்லாமல் தான் உண்டு தனது வேலை உண்டு ...

Widgets Magazine Widgets Magazine