1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (10:14 IST)

மகளின் திருமணத்திற்காக பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்த தந்தை

வேலூரில் மகளின் திருமணத்திற்காக தந்தை பிச்சை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தில் பாசத்திற்கு ஈடு இணையில்லாதவர்கள் தாய் தந்தையர் தான். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக அவர்கள் செய்யும் தியாகம் இந்த உலகத்தை விட பெரியது.
 
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரான்ஜி. இவரது மனைவி இறந்துவிட்டார். ரான்ஜிக்கு திருமணம் வயதில் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தனக்கும் வயதாகிக்கொண்டே போவதால் தனது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முற்பட்டார். ஆனால் அவரிடம் போதிய பண வசதி இல்லை.
 
ஆகவே அவர் மகாத்மா காந்தி வேடம் அணிந்துகொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுத்து வருகிறார். நேற்று குடியாத்தம் பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காவல் துறையினர் அய்யா மகாத்மா காந்தி  தேசத்திற்காக பாடுபட்ட தியாகி. அவரின் வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு என கூறி அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.