புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (12:23 IST)

தேசிய விருது பெற்ற தி.மு.க. பிரமுகர் உடல் சிதறி பலியான சோகக்கதை...

சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் குடும்பத்தினரோடு உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு விஷ்ணுப்ரியா என்ற மகள் இருந்தார். தி.மு.க. பிரமுகரான கணேசன் ஊராட்சிமன்ற  முன்னாள் தலைவராக பதவி வகித்தகாலத்தில் சிறந்த ஊராட்சிமன்ற தலைவருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார்.
 
இந்நிலையில் மஞ்சுளா அதிகாலையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்து சிதறியதில் மஞ்சுளா, கணேசன், விஷ்ணுப்ரியா ஆகிய மூவரும் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பலியாகினர். விசாரணையில் கேஸை சரியாக மூடாததால், சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்திருந்திருக்கிறது. இதனை அறியாத மஞ்சுளா நெருப்பை பற்றவைத்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.