வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (19:55 IST)

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி?

தமிழகத்தில் இரண்டு பெரிய ஆளுமை உள்ள தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவருமே இல்லாததால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
 
இந்த வெற்றிடத்தை நிரப்பும் அளவுக்கு பெரிய தலைவர்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிலும் இல்லாததால் புதுப்புது தலைவர்கள் உருவாகி வருகின்றனர். கமல், ரஜினி, தினகரன் ஆகிய மூவரும் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக மாற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 
ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியை இழந்த அதிமுக, தனது செல்வாக்கை நிரூபிக்கவும், ஆளுங்கட்சி என்ற முறையிலும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
 
அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்த திமுக, ஸ்டாலின் தலைமையை உறுதி செய்ய வேண்டும் என்றால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தங்களுடைய அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கலாம் என கமல், ரஜினி, தினகரன் ஆகிய மூவரின் எண்ணமாக இருக்கலாம். எனவே மக்களின் தீர்ப்பு யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.