சென்னையில் அட்டூழியம்: 7 வயது சிறுவனை வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்

boy
Last Modified வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:23 IST)
சென்னையில் 7 வயது சிறுவனை இரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(பொறுக்கிகள்) அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக்.  இவருக்கு திருணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக்கின் 7 வயது மகன் சந்துரு நேற்று தனது தாய்மாமாவுடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவர்களுக்கு பின்னால் இரண்டு வாலிபர்கள் கையில் அரிவாளை சுழற்றியபடி வந்துகொண்டிருந்தனர். அப்போது சத்தம்கேட்டு பின்னால் திரும்பிய சந்துருவின் தலையிலும் தோல் பட்டையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தலையிலும் தோல் பட்டையிலும் ரத்தம் வழிந்தது.
 
அதிர்ச்சியடைந்த அவரது மாமா சிறுனை மருத்துவமனையில் அனுமதித்தார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு இரு சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். அந்த பொறுக்கிகள் தான் குடிபோதையில் இந்த அட்டூழியத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :