1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (13:24 IST)

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோய்

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. நோய் அதிகமாக இருப்பதால் மருந்தின் தேவையும் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.