1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:39 IST)

4 குழந்தைகள் உள்பட 8 இலங்கை அகதிகள்: 3வது மணல் திட்டில் தவித்த நிலையில் மீட்பு!

srilankan refugee
4 குழந்தைகள் உள்பட 8 இலங்கை அகதிகள்: 3வது மணல் திட்டில் தவித்த நிலையில் மீட்பு!
4 குழந்தைகள் உள்பட 8 அகதிகள் தனுஷ்கோடி மூன்றாவது மணல் திட்டில் தவித்த நிலையில் இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது வாடிக்கையாகி உள்ளதுல். இந்த நிலையில் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள மூன்றாவது மணல் திட்டில் 4 குழந்தைகள் உள்பட 8 அவர்கள் இருப்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் வெளியானதை அடுத்து அந்த அகதிகளை காவல்துறையினர் மீட்டனர்
 
இரண்டு மாத கைக்குழந்தை உள்பட 8 பேரையும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு பல அகதிகள் வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 8 பேர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது