திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (18:28 IST)

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் எத்தனை பேர்?

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளது.
 
இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 52 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 47 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90% சென்னையில் உள்ளவர்கள் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 81 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் 1101 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7,176 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 94,781 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது