Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனை வீழ்த்திய எடப்பாடி: வெறும் 5 எம்எல்ஏக்கள் தான் ஆதரவாம்!

தினகரனை வீழ்த்திய எடப்பாடி: வெறும் 5 எம்எல்ஏக்கள் தான் ஆதரவாம்!

செவ்வாய், 13 ஜூன் 2017 (14:37 IST)

Widgets Magazine

அதிமுகவில் தற்போது மூன்றாவது அணியை உருவாக்கி செயல்பட்டு வரும் தினகரன் அணிக்கு வெறும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
ஏற்கனவே தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.
 
மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார். இதனையடுத்து சசிகலாவை சிறையில் சந்தித்த பின்னர் பேட்டியளித்த தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாகவும், அதற்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையவில்லை என்றால் தான் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறினார்.
 
ஆனால் அதிமுக அமைச்சர்கள் அவரை மீண்டும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என அறிவுறுத்தினர். இதனையடுத்து தினகரனை வரிசையாக எம்எல்ஏக்கள் சந்தித்தவாறு இருந்தனர். இதனால் அதிமுகவில் மூன்றாவது அணி உருவானது.
 
தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தது இதனால் எடப்பாடி அணி சற்று கலக்கமடைந்தது. இறுதியாக 33 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கூறப்பட்டது. இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுடன் பேசினார்.
 
இந்த கூட்டத்துக்கு தினகரனை சந்திக்க சென்ற எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களின் ஆதரவை தக்கவைத்துக்கொண்டார்.
 
உங்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகிறேன் ஆனால் அமைச்சர் பதவி குறித்து என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது. அரசுக்கு முழு ஒத்துழைப்புக் தாருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து எம்எல்ஏக்களும் ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட இருந்தார். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என எடப்பாடியிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது தினகரன் அணியில் ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உயிரிழந்த சிறுமியின் உடலை சைக்கிளில் தூக்கி சென்ற வாலிபர் - தொடரும் அவலங்கள்

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் உடலை எடுத்து செல்ல வாகனம் தராததால், அந்த ...

news

தினகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் தீபா பரபரப்பு புகார்...

போயஸ்கார்டன் இல்லத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.வின் ...

news

குறுகிய சாலையில் அதிவேகமாக டிரைவ் செய்பவரா? இந்த விடியோ பாருங்க!!

சிறிய சாலை ஒன்றில் அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்துக்குள்ளாகிய சம்பவம் சிசிடிவி ...

news

ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் சரவணன்!

எம்எல்ஏ சரவணன் கூறியதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பெரும் ...

Widgets Magazine Widgets Magazine