1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (09:55 IST)

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்நிலையில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்,  ராணிபேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய தமிழகத்தின் 5 மாவட்டங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.