1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (08:22 IST)

தமிழகத்தில் கொரோனாவுக்கு 4வது பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிக அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் இல்லாமல் இருந்தது ஒரு ஆறுதலாக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர் என்பதால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக மாறியது
 
இந்த நிலையில் சற்று முன் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தால் அந்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்தார்
 
இருப்பினும் அவரது ரத்த மாதிரி முடிவு வராததால் அவர் கொரோனாவினால்தான் உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்படவில்லை. இதனை அடுத்து தற்போது அவரது ரத்த மாதிரி சோதனை முடிவு வெளிவந்துள்ளது. அந்த முடிவின்படி அவர் கொரோனாவினால் தான் உயிரிழந்தார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
துபாயில் இருந்து சென்னை வந்த இந்த முதியவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 4வது  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது