1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (19:19 IST)

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323ஆக அதிகரித்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம்  906 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இன்று 48 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1258 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சென்னையை அடுத்து மதுரை மற்றும் செங்கல்பட்டில் தலா 5 பேர்களும், ராமநாதபுரத்தில் 3 பேர்களும், பெரம்பலூரில் இருவரும், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 9,787 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 119,748 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது