Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல் நாளே கூட்டம் இல்லை. அதிர்ச்சியில் கட்டணத்தை குறைத்த மெட்ரோ நிர்வாகம்


sivalingam| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (22:52 IST)
சென்னையில் இன்று முதன்முதலாக சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான இந்த சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கட்டணம் ரூ.40 என்று இருந்ததால் முதல் நாளே மெட்ரோ ரயில் பாதிக்கும் மேல் காலியாக பயணிகள் இல்லாமல் சென்றது.


 


திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை பேருந்தில் சென்றால் வெறும் ரூ.10தான் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலில் ரூ.40 என்ற கட்டணம் இருப்பதால் பயணிகள் ஒருமுறை மெட்ரோ ரயில் அனுபவத்திற்காக மட்டுமே செல்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மெட்ரோ நிர்வாகம் தற்போது டிக்கெட் விலையில் 40 சதவீதம் சலுகை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் சலுகை ஒரு வாரத்திற்கு மட்டுமே என்று கூறப்பட்டிருப்பதால் தொடர்ந்து மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஏற்கனவே கோயம்பேடு முதல் சின்னமலை வரை ஓடும் மெட்ரோ ரயிலில் சுமாரான கூட்டம் தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதில் மேலும் படிக்கவும் :