வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:21 IST)

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சட்டவிரோதமான  டாஸ்மாக் மதுபாட்டில்களை காலை மற்றும் இரவு நேரத்தில் விற்பனை செய்து வருவதாக மேற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸார் மற்றும் பரமத்திவேலூர் போலீஸார்  கைது செய்துள்ளனர்.

மேலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் காலை மற்றும் இரவு வேளைகளில்  சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸார் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வேலூர் நான்கு ரோடு மற்றும் சந்தைப் பகுதியில் செல்லாண்டியம்மன் கோயில், ஆகிய  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட் ஆகிவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.