1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (20:51 IST)

தமிழகத்திற்கு வந்துவிட்டது 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததன் காரணமாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தது ஆனால் தற்போது தமிழக அரசு கொடுத்த அழுத்தம் மற்றும் மத்திய அரசு அளித்துவரும் தடுப்பூசி காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னைக்கு 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும் இதனை அடுத்து இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தடுப்பூசி இல்லை என்ற பேச்சுக்கு இடமிருக்காது என்றும் தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன