வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:11 IST)

தமிழகத்தில் 300ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. சென்னையில் மட்டும் 113.. அதிர்ச்சி தகவல்..!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த வாரம் வரை தினமும் 200க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 369 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
இதில் சென்னையில் மற்றும் 113 பேர்களும், செங்கல்பட்டில் 37 பேர்களும் கோவையில் 17 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4516 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 172 பேர் நேற்று ஒரே நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் தற்போது 1900 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் எந்தவித உயிர் பலியும் இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran