கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் பெறப்பட்ட நிலையில் மூன்றே நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்களை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 20,765 நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்ப பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில் 36 லட்சத்து 6 ஆயிரத்து 974 விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
Edited by Siva