ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (08:50 IST)

36 ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி முடிவு !

தமிழகத்தில் உள்ள 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மொத்தமாக 36 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். இவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், திருப்பூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்று டெல்லியில் பணிபுரிந்து வந்த 11 அதிகாரிகளும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் ‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக இருந்த ஜோதி நிர்மலா, பதிவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தித் துறையின் நிர்வாகச் செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிவந்தார். சிறுபான்மையினர் நலத் துறை செயலாளராக இருந்த வள்ளலார், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கலெக்டராக மேகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வேலூரில் சப் கலெக்டராக பணியாற்றிவந்தார். இதுவரை நாமக்கல் கலெக்டராக பணியாற்றிவந்த ஆசியா மரியம், எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பாஸ்கரன், ஏற்கனவே கூடுதலாக வகித்து வந்த நகராட்சி நிர்வாக கமிஷனராக தொடர்கிறார்.

புதிதாக உருவாக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரி சிவன் அருள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தருமபுரியில் சப்-கலெக்டராக பணியாற்றிவந்தவர். ராணிப்பேட்டை சிறப்பு அதிகாரியாக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டராக விஜயகார்த்திகேயனும், நாகை கலெக்டராக பிரவீன் நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை செயலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக ராஜேந்திரகுமாரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.