வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By அபிமுகதீசு
Last Modified: ஞாயிறு, 29 மே 2016 (07:12 IST)

திருவள்ளூர் மாவட்டத்தில் 317 கொத்தடிமைகள் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல்சூலையில் இருந்து 317 கொத்தடிமைகள் வருவாய்துறையினரால் மீட்கப்பட்டனர்.


 

 
இன்றைக்கும் கொத்தடிமை முறை இருக்கிறதா? இப்படி ஆராய்ந்தால் செய்திகளின் ஊடாக ‘கொத்தடிமை’கள் இத்தனைபேர் மீட்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம். அவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் செங்கல்சூலை, அரிசியாலைகள், கல்குவாரி போன்ற இடங்களிலிருந்து மீட்கப்பட்டார்கள் என்று அறிகிறோம்.
 
அதுபோல திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் முனுசாமி என்பவர், அவரது செங்கல்சூலையில் ஒடிசாவை சேர்ந்தவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்துள்ளார். இதுகுறித்து கோட்டாச்சியருக்கு கிடைத்த தகவலின்படி, வருவாய்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 
 
சோதனையில் ஒடிசாவை சேர்ந்த 317 கொத்தடிமைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் முனுசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.