செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (18:44 IST)

தமிழகத்தில் இன்று 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று 31 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்
 
சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா வைரஸால் இன்று பாதிக்கப்பட்ட 31 பேர்கள் 21 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 31 மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் சற்று ஆறுதலை அளித்து உள்ளது 
 
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,711 பேர் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் இருப்பதாகவும், 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்தவர்கள் 88,529 பேர்கள் என்றும் இதுவரை பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 19,255 என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.