செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:00 IST)

ரகசியமாக வீடியோ எடுத்த நபர் – பெண்களுக்கு உதவுவது போல நடித்து ஏமாற்றிய கொடூரன்

கோவையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண்கள் துணி மாற்றுவதை வீடியோ எடுத்த மற்றும் அதை பரப்பிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள பிரபல பெட்ரோல் பங்கில்  ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களும் வேலைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வரும் பெண்கள் தங்கள் சீருடைகளை  மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் ரகசியமாக தனது மொபைல் கேமராவை பொறுத்தி வீடியோ எடுத்துள்ளார் சக ஆண் ஊழியரான சுபாஷ்.

இதையறிந்த அந்த பெண்கள் இதுகுறித்து நிறுவனத்திடம் புகார் கொடுக்க சுபாஷிடம் இருந்த வீடியோக்களை வாங்கி அதை அழித்துள்ளார் மணிகண்டன். அதன் பின் சுபாஷை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 6 மாதம் முடிந்த நிலையில் தற்போது சுபாஷ் எடுத்த வீடியோக்கள் சமூக இணையதளத்தில் பரவ சம்மந்தப்பட்ட பெண்கள் அதிர்ச்சியாகி சைபர் கிரைம் போலிஸில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சுபாஷ் அந்த வீடியோக்களை பரப்பவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் நடத்திய விசாரணையில் சுபாஷிடம் இருந்து வீடியோக்களை வாங்கி அழித்ததாக சொன்ன மணிகண்டன், அவற்றை செல்போனில் சேமித்து வைத்துள்ளார்.  பின்னர் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்ப, அவர் மூலமாக இணையதளத்தில் வீடியோ பரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.