ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:45 IST)

சாதி மறுப்பு திருமணம்… ஊரைவிட்டு 29 தலித் குடும்பங்கள் ஒத்திவைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதால் உருவான தகராறில் 29 தலித் குடும்பங்கள் ஊரைவிட்டே தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது உலகம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட இளைஞர் ஒருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் ஊரைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெண் வீட்டார் தலித் பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களை தாக்கியதாக ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல பெண் வீட்டு தரப்பில் தங்கள் பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாக ஒரு வழக்கு உள்ளது. இவையெல்லாம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இப்போது இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வழக்குகளையும் வாபஸ் வாங்குவது என முடிவெடுத்துள்ளனர் ஆனால் ஆதிதிராவிடர் தரப்பு அதற்கு மறுக்கவே அந்த ஊரில் வசிக்கும் 29 குடும்பங்களையும் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.