திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:20 IST)

டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: சசி குடும்பத்துக்கு முதல் அடி

அந்நிய செலாவணி மோசடி குற்றத்தில் ஈடுப்பட்ட வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


 

 
1991 - 1995 ஆம் ஆண்டுகளில், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் வெளிநாட்டில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிய செலாவணி மோசடியில் ஈடுப்பட்ட குற்றத்துக்காக, அமலாக்கத்துறை சார்பில் டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து அபராதத்தை உறுதி செய்தனர்.